கருவிழித் தொற்று: பார்வையிழப்பைத் தடுக்க, விரைந்து செயல்படுங்கள்!
Related content
கண்களில் அதிக வலியும் அதிக சிகப்புத் தன்மையும் இருக்கும் நேரத்தில் தான் நோயாளிகள், பெரும்பாலும் மருந்துக் கடை ஊழியர்கள் மற்றும் சமூக சுகாதார ஊழியர்களிடம் வருகிறார்கள். அந்த நோயாளிகளின் கருவிழியின் ஒரு வெள்ளை புள்ளியும் இருந்தால், அவர்களுக்கு கருவிழித் தொற்று இருக்கக் கூடும். வேகமாக செயல்பட்டால் நோயாளிகளின் பார்வையையும் கண்ணையும் காப்பாற்றலாம்.
கண்ணை எவ்வாறு பரிசோதிப்பது
ஒரு பிரகாசமான ஒளி மற்றும் உருப்பெருக்கத்துடன் நோயாளியின் கண்ணை நெருக்கமாகப் பார்க்கவும் (எடுத்துக்காட்டாக, ஒரு மொபைல் கேமரா). நோயாளிடம் கண்களை மேலும் கீழும், வலதுபுறமும் இடதுபுறமும் பார்க்கச் சொல்லுங்கள். பரிசோதிக்கும்போது நோயாளியால் கண்களைத் திறக்க முடியாத அளவுக்கு கண் மிகவும் வேதனையாக இருந்தால், உடனடியாக ஒரு கண் மருத்துவரிடம் பரிசோதிக்கும்படி பரிந்துரைக்கவும்.
கருவிழி என்றால் என்ன?
ஆரோக்கியமான கண்ணில், கருவிழி என்பது கண்ணின் முன் பகுதியாகும். கண் பாவை (கருப்பு) மற்றும் ஐரிஸ் (பழுப்பு) ஆகியவற்றின் தெளிவான / பார்க்கும் பகுதியாகும்
கருவிழியில் நோய்த் தொற்றை எவ்வாறு கண்டறிவது?
கருவிழியில் ஏதேனும் வெள்ளைத் திட்டு இருந்தாலோ கண் சிவந்து இருந்தாலோ மற்றும் வலி இருந்தாலோ, நோய்த் தொற்று இருப்பதைக் குறிக்கிறது.
நோய்த் தொற்றின் ஆரம்ப நிலை: கருவிழியில் உள்ள வெள்ளைத் திட்டையும் மற்ற இடங்களில் சிவந்திருப்பதையும் கவனிக்கவும்
தாமதமான நிலை: கருவிழியின் அடிப்பகுதியில் ஒரு பெரிய வெள்ளை திட்டு மற்றும் சீழ் கட்டி இருக்கும்.
என்ன செய்வது
நோயாளிக்கு வெள்ளைத் திட்டு, கண் சிவப்பு மற்றும் கண் வலி இருந்தால்:
✔️ நோயாளியை உடனடியாக கண் மருத்துவரிடம் அனுப்பவும். அவர்கள் 24 மணி நேரத்திற்குள் அந்த நோயாளியைப் பரிசோதிக்க வேண்டும். அங்கு செல்வதற்கான முகவரி மற்றும் பாதை விவரங்களை அவர்களுக்கு வழங்கவும்.
✔️ நோயாளிக்கு விரிவான ஆண்டிபயாடிக் கண் சொட்டு மருந்தை போட்டு விடவும். அதை அவர்கள் கண் நிமருத்துவரிடம் பார்க்கும் வரை, ஒவ்வொரு 1-2 மணி நேரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும்.
✔️ கண்களைத் தொடாமல், கண் சொட்டு மருந்துகளை எவ்வாறு போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை நோயாளிக்கு விளக்கவும்.
எதை தவிர்க்க வேண்டும்
நோயாளிக்கு வெள்ளைத் திட்டு, கண் சிவப்பு மற்றும் கண் வலி இருந்தால்:
X ப்ரெட்னிசோலோன் அல்லது டெக்ஸாமெதாசோன் போன்ற ஸ்டீராய்டு கண் சொட்டுகளைப் பயன்படுத்தக்கூடாது
X ஸ்டிரைல் செய்யப்படாத மருத்துவப் பொருட்கள்
உங்களால் வெள்ளைத் திட்டுப் பகுதியைப் பார்க்க முடிந்து, கண் சிவப்போ வலியோ இல்லை என்றால், அது ஒருவேளை நோய்த் தொற்றாக இல்லாமல் இருக்கலாம். நோயாளிக்கு கண்புரை (இடது) அல்லது கருவிழி வடு (வலது) இருக்கக் கூடும். மருத்துவ ஆலோசனைக்காக அவர்களை கண் மருத்துவரிடம் பார்க்கவும்.